கலையுலகில் நீங்காப் புகழுக்கு சொந்தக்காரர் இயக்குநர் கே.பாலச்சந்தர் – கமல்ஹாசன் புகழாரம்!!

தமிழ் திரையுலகில் தனது புதுமையான படைப்புகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது மாபெரும் ஆளுமைகளாக இருக்கும் பல்வேறு நட்சத்திரங்களை அடையாளம் கண்டவர். கலையுலகில் நீங்காப் புகழுக்கு சொந்தக்காரர். இயக்குநர் கே.பாலச்சந்தரின் பிறந்த நாள் இன்று.

திரையுலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பங்காற்றி வந்தவர். கே.பி. என்றும் இயக்குநர் சிகரம் என்றும் அழைக்கப்பட்டார். 1930-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி பிறந்த கே. பாலச்சந்தர் 2014-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி உயிரிழந்தார். அவர் மறைந்தாலும் அவரது படைப்புகளும், அவர் உருவாக்கிய நட்சத்திரங்களும் இன்றும் அவரின் திரை ஆளுமைக்கு சாட்சியாக விளங்குகின்றன.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் கே.பாலசந்தர் பிறந்தநாளை ஒட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான பதிவில், “Thank you #KBSir. இன்று அவரது பிறந்த நாள். அவர் புகழ் ஓங்குக!” என்று தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *