மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் தலைமையில் வரும் 21-09-2024 (சனிக்கிழமை) அன்று சென்னையில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இடம்: காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை, சென்னை. நாள் : 21-09-2024 – சனிக்கிழமை நேரம்: காலை 9 மணி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.