தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 44-வது ஆண்டு நினைவு நாள்; சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தலைவர்கள் அஞ்சலி!!

சென்னை:
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 44-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.


சி.பா.ஆதித்தனார் சிலைக்கு ‘மாலைமுரசு’ நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன், ‘தினத்தந்தி’ குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ‘தினத்தந்தி’ குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினர்.

அதனைத் தொடர்ந்து தினத்தந்தி, மாலைமலர், தந்தி டி.வி., டி.டி.நெக்ஸ்ட், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் அஞ்சலி செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனித நேய அறக்கட்டளை தலைவரு மான சைதை துரைசாமி, தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், ஜி.கே.தாஸ், சிவாஜிநாதன், ஆர்.டி.குமார், ம.தி.மு.க. நிர்வாகிகள் ஜீவன், கழக குமார், மாவை மகேந்திரன், சுப்பிரமணி, லோகு, ராஜேந்திரன், செல்வபாண்டியன், ஆவடி அந்திரிதாஸ், கருணாகரன், தென்றல் நிசார், தாமோதரன், பூங்காநகர் ராமதாஸ்,
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அய்யனார், மண்டல செயலாளர் டால் பின் ரவி, மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார், அன்பு தென்னரசு, சுமித்ரா, கவுசல்யா, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாரா யணன், நிர்வாகிகள் பாஸ்கர், வில்லியம்ஸ், ராஜேஷ், மாசிலாமணி, தாஸ், சதீஷ், சங்கர பாண்டி யன், அருண்குமார், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், நிர்வாகிகள் பழனி, சுதர்சன், லோகநாதன், ராதா கிருஷ்ணன், சீனிவாசன், ஆனந்தன், முருகப்பெருமான், சங்கர், தீர்த்தகிரி, ஸ்ரீராம், வினோத்குமார், வெங்கடேசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *