ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டி

ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா, கடந்த 2013 ஜனவரி 4.ம் தேதி உயிரிழந்தார்.

இதன் காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி 27.ம் தேதி நடைபெற்இடைத்தேர்தலில், காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற நிலையில், அவரும் டிசம்பர் 14.ம் தேதி உடல் நல்குறைவால் உயிரிழந்தார்.

இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது் முறையாக இடைத்தேர்தல் பிப்ரவரி 5.ம் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளராக உள்ள V.C.சந்திரகுமார் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *