சென்னை;
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர்களையும், தேர்தல் அறிக்கையையும் இன்று திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
பின்னர் தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
“சில தொகுதிகளைப் பெற்று, சில தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளோம். பெரிய கூட்டணியில் இது இயல்பானது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்பைத் தாண்டி கட்சியின் நலன், மாநிலத்தின் நலன், நாட்டின் நலனே முக்கியம் என வேலை பார்க்க வேண்டும். கூட்டணி கட்சிகளையும் இணைத்து தேர்தல் பணிக்குழுக்களை அமைக்க வேண்டும்.

போஸ்டர்ஸ், துண்டறிக்கைகளில் அனைத்துக் கட்சி தலைவர்களின் படங்களும் கட்டாயம் இருக்க வேண்டும். எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அந்த இடத்திற்குப் பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை இப்போதே சொல்லி விடுகிறேன். கண்டிப்புடன் சொல்கிறேன்” என்றார்.