நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரையும் இழந்த பாகிஸ்தான்!!

பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து க்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த டி20 தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 292 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் மிட்செல் 99 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால் 114 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஃபஹீம் அஷ்ரஃப் மற்றும் நசீம் ஷா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர்.

ஃபஹீம் அஷ்ரஃப் 73 ரன்னிலும் நசீம் ஷா 51 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 41.2 ஓவர்களில் 208 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் பென் சியர்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசி ஒருநாள் போட்டி வருகிற 5-ந் தேதி நடக்கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *