உலக சாம்பியன் ஹர்மன்பிரீத் கவுர் உற்சாகம்!!

நவிமும்பை:
ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் நேற்று முன்​தினம் தென் ஆப்​பிரிக்க அணியை 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி முதல் சாம்​பியன் பட்​டம் வென்று சாதனை படைத்​துள்ள ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய அணி.

முதலில் பேட் செய்த இந்​திய அணி ஷபாலி வர்மா (87), தீப்தி சர்மா (58), ஸ்மிருதி மந்​தனா (45), ரிச்சா கோஷ் (34) ஆகியோரது சிறப்​பான பேட்​டிங்​கால் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 298 ரன்​கள் குவித்​தது.

299 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி​யானது தீப்தி சர்​மா, ஷபாலி வர்மா ஆகியோரது சிறப்​பான பந்​து​வீச்​சால் 45.3 ஓவர்​களில் 246 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. கேப்​டன் லாரா வோல்​வார்ட் 101 ரன்​கள் விளாசிய போதி​லும் மற்ற வீராங்​க​னை​களிடம் இருந்து சிறந்த செயல் திறன் வெளிப்​ப​டாத​தால் தென் ஆப்​பிரிக்க அணி தோல்​வியை சந்​தித்​தது.

இந்த வெற்​றி​யானது 1983-ம் ஆண்டு கபில்​தேவ் தலை​மையி​லான இந்​திய ஆடவர் அணி முதன் முறை​யாக உலகக் கோப்பை வென்று வரலாற்று சாதனை நிகழ்த்​தி​யதை நினை​வூட்​டும் வகை​யில் அமைந்​தது.

எனினும் மகளிர் உலகக் கோப்​பை​யில் இந்​திய அணி பட்​டம் வென்​றுள்​ளது 50 வருட போராட்​டங்​களுக்கு கிடைத்த மாபெரும் வெற்​றி​யாகவே பார்க்​கப்​படு​கிறது. 1973-ம் ஆண்​டில் இருந்து இது​வரை 13 முறை மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் நடை​பெற்​றுள்​ளது.

ஆஸ்​திரேலி​யா, இங்​கிலாந்து மற்​றும் நியூஸிலாந்து ஆகிய அணி​கள் மட்​டுமே அனைத்து தொடர்​களி​லும் விளை​யாடியுள்​ளன. இவற்​றில், ஆஸ்​திரேலியா 7 முறை​யும், இங்​கிலாந்து 4 முறை​யும், நியூஸிலாந்து ஒரு​முறை​யும் கோப்பை வென்​றுள்​ளன.

1976-ல் விளை​யாடத் தொடங்​கிய மகளிர் அணி​யினர், 50 ஆண்​டு​களை கடந்து இப்​போது​தான் முதல்​முறை​யாக உலகக் கோப்​பையை வென்று சாதித்​துள்​ளனர்.

2005 மற்​றும் 2017-ம் ஆண்​டு​களில் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறிய போதி​லும் இந்​திய அணி​யால் வெற்​றியை கோப்​பையை முத்​தமிட முடி​யாமல் போனது.

மேலை நாடு​கள் மட்​டுமே ஆதிக்​கம் செலுத்​திய மகளிர் கிரிக்​கெட்​டில் தற்​போது முதல் ஆசிய அணி​யாக இந்​தியா கோப்​பையை வென்று சாம்​பியன் பட்​டம் வென்ற 4-வது நாடாகப் பட்​டியலில் இடம்​பிடித்​துள்​ளது.

சாம்​பியன் பட்​டம் வென்ற பின்​னர் இந்​திய அணி​யின் கேப்​ட​னான ஹர்​மன்​பிரீத் கவுர் கூறிய​தாவது: இது ஆரம்​பம்​தான்.

இந்​தத் தடையை உடைக்க நாங்​கள் விரும்​பினோம். இதை ஒரு பழக்​க​மாக்​கு​வதே எங்​கள் அடுத்த திட்​டம். நாங்​கள் காத்​திருந்த தருணம் வந்​து​விட்​டது. நாங்​கள் தொடர்ந்து முன்​னேற விரும்​பு​கிறோம். இது முடிவு அல்ல, வெறும் ஆரம்​பம்.

லாரா வோல்​வார்ட்​டும், சுனே​வும் சிறப்​பாக பேட் செய்து கொண்​டிருந்​தனர். அப்​போது நான் ஷபாலி வர்​மாவை பார்த்த போது அவருக்கு ஒரு ஓவரை​யா​வது கொடுக்க வேண்​டும் என என்​னுடைய உள்​ளுணர்வு கூறியது. அது​தான் எங்​களுக்கு திருப்​பு​முனை​யாக அமைந்​தது.

இறு​தி​யில் தென் ஆப்​பிரிக்க வீராங்​க​னை​கள் சற்று பதற்​றம் அடைந்​தனர். அதை நாங்​கள் அறு​வடை செய்​தோம். சரி​யான நேரத்​தில், தீப்தி சர்மா விக்​கெட்​டு​களை வீழ்த்​தி​னார். இவ்​வாறு ஹர்​மன்​பிரீத்​ கவுர்​ கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *