திருவள்ளூர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 390 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அரசு விழாவில் பங்கேற்க திருவள்ளூர் மாவட்டம் பென்னேரி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வழிநெடுகிலும் கூடியிருந்த திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பொதுமக்களுக்கு கை கொடுத்து, புகைப்படம் எடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.