சென்னை:
2 அமைச்சர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதை மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு அமைச்சர்கள்.. இந்த இருண்ட ஆட்சியின் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.. ஒருவர் பொன்முடி மற்றொருவர் செந்தில் பாலாஜி.. இவர்கள் இரண்டு பேரும் நீக்கப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது…
ஒருவர் நீக்கப்படுவது பெண்களுக்கு எதிரான துறையாக கருதப்படும் டாஸ்மாக்கில் முறைகேடு நடந்ததனால்… மற்றொருவர் நீக்கப்படுவது… பெண்களுக்கு எதிராக முறைகேடாக பேசியதால்..
இந்த இரண்டு முறைகேடுகளைப் பற்றி தொடர்ந்து கோரிக்கை வைத்தாலும் முதலமைச்சர் ஸ்டாலின் செவி சாய்க்காமல் இருந்தார்.. இன்று நீதிமன்றத்தின்.
கட்டாயத்தின் பேரிலும் மக்கள் மன்றத்தின் கட்டாயத்தின் பெயரிலும.. இருவரும் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.. ஆக தவறு செய்தவர்களை.. இனிமேலும் தொடர முடியாது என்ற நிலை வந்ததனால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது…
இல்லையென்றால் தொடர்ந்து இருந்திருப்பார்கள்.. இனிமேல் பொறுக்க முடியாது என்ற சூழ்நிலை வந்ததனால் தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்களே தவிர இல்லை என்றால் பொறுத்து போயிருப்பார்கள்…
ஆக இந்த நடவடிக்கை.. தானாகஎடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கை… என்பதை மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.. 2026 திமுகவிற்கு எதிராக பதில் சொல்வார்கள்.