சென்னை;
அரசு கல்லூரிகளில் ரூ.120 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அரசு கல்லூரிகளில் ரூ.120 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை, ஆய்வகக் கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
சென்னை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். ரூ.207.82 கோடியில் உயர்கல்வித் துறை சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதேபோல் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் ரூ.527 கோடியில் 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், ரூ.207 கோடியில் கட்டப்பட்டுள்ள 4 வணிக வளாகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்து. 109 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.