கோவை
ஆர்,எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பாஜகவினர் கலந்துகொண்டது ஆச்சரியப்படும் விஷயம் அல்ல. ஆனால் அதிமுகவைச் சேர்ந்த முன்னால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், அவரது சகோதரர் அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்து முன்னணி சார்பில் நேற்று மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக அமைச்சர்கள் கலந்துகொண்டதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. காரணம் அந்த நிகழ்ச்சியில் பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சிக்கும் வகையிலான வீடியோ ஒளிபரப்பப்பட்டது. திராவிடத்திற்கு எதிராக நடத்தப்படும் மாநாட்டில் அமைச்சர்கள் கலந்துகொண்டது வெட்கக்கேடான செயல் என திமுக சாடியுள்ளது..
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றிருப்பது பேசுபொருளாகியுள்ளது. அத்துடன் ஆர்.எஸ்,எஸ் தகைவர் மோகன் பகவத்துக்கு, வேலுமணி சிறிய அளவிலான முருகன் சிலையை பரிசளித்தார். அவரது சகோதரர் அன்பரசன் முருகனின் வேல் ஒன்றை பரிசளித்தார்.