சென்னை ;
ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சாண்டி மாஸ்டர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்த ஆண்டு எனது பிறந்தநாள் தலைவரின் ஆசியுடன் மிகவும் சிறப்பாக அமைந்தது” என்று தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தில் இடம்பெற்றுள்ள சிக்கிடு பாடலுக்கு சாண்டி மாஸ்டர் தான் நடனம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.