இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி, டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டார்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கோலியும் ரோகித்தும் ஓய்வை அறிவித்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி பல சாதனைகளை படைத்துள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்றை ஐசிசி-யின் முன்னாள் நடுவர் அனில் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எதிரணியினர் கோலியை கண்டு பயந்ததை நான் என் கண்முன்னே பார்த்திருக்கிறேன்.
அவர் களத்திற்குள் வந்தாலே அவர்கள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். அணியில் உள்ள பாதி பேரின் கவனம் அவர் மீதுதான் இருக்கும். என அனில் சவுத்ரி கூறினார்.