ஐரோப்பிய பெண்கள் கால்பந்து அரையிறுதி: 2-1 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து!!

ஜெனீவா:
14-வது ஐரோப்பிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடந்த முதல் அரைஇறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-இத்தாலி அணிகள் மோதின.


போட்டியின் 33-வது நிமிடத்தில் இத்தாலி அணிக்காக பார்பரா போனான்சியா கோல் அடித்தார். ஆட்டம் முடியும் தருவாயில் அதாவது 96-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை மிச்செல் அகேமாங் பதில் கோல் அடித்து சமன் செய்தார்.

1-1 என்ற சமநிலை ஏற்பட்டதால் கூடுதல் நேரம் கடைபிடிக்கப்பட்டது. இதில் கோல் அடித்து இங்கிலாந்து வெற்றி பெற்றது. 119-வது நிமிடத்தில் அந்த அணி சோலி கெல்லி கோல் அடித்தார். ஆட்டம் முடியும் வரை இத்தாலி அணியால் மேலும் கோல் எதுவும் அடிக்க இயலவில்லை.

இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதியில் ஜெர்மனி-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *