கோவை;
கோவை பச்சாபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சங்கம் சார்பில் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மாற்றுத்திற னாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா டி டி என் எஸ் தலைவர் தேவ கோவிந்தராஜு தலைமையில் நடைபெற்றது…
இதன் துவக்க விழாவில் சவுத் இந்தியா புல்லியன் அசோசியேசன் தலைவர் சுரபி கார்த்திக், லயன் மாவட்ட தலைவர் சுபாசுப்பிரமணியம்,, tnau மேனாள் இயக்குனர் முனைவர் விஜயராகவன்,, சமூக சேவகி கௌசல்யா பரமேஸ்வரன், mm. குமரேஷ், மரம் யோகநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர்….
நிகழ்ச்சியில் டிடிஎன்எஸ் புரவலர் கே .வி.சா,, துணைத் தலைவர் பிரைட் சாம் ,செயலாளர் சுதா, பொருளாளர் ஸ்ரீ கலா, அமைப்புச் செயலாளர் cv.பாலசுப்ரமணியம் துணைச் செயலாளர் இம்தியாஸ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்…
நிகழ்ச்சிக்கு முன்னதாக கும்மியாட்டம் அரங்கேற்ற விழா நடைபெற்றது… மேலும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சிகள்,, நடனங்கள்,, சிலம்பம்,, யோகா உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது…
நிகழ்ச்சி குறித்து தலைவர் தேவ கோவிந்தராஜு கூறுகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சங்கம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இத்தருணத்தில் அரசு அதிகாரிகள் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு எந்த ஒரு விளக்கமும் கேட்காமல் இல்லங்களை பூட்டி விடுகின்றனர். இதனால் தன்னார்வலர்கள் மிகவும் பாதிப்படைகின்றனர்.
எனவே ஏதாவது புகார் வரும் பட்சத்தில் தொண்டு நிறுவனங்கலின் சங்கம் சார்பில் அளிக்கும் விளக்கங்களை கேட்டு அதன் பிறகு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு தருணத்தில் கோரிக்கை வைக்கிறேன் என்று தெரிவித்தார்….
முப்பெரும் விழாவில் டிடிஎன்எஸ் நிர்வாகிகள் மற்றும் 95 தொண்டு நிறுவனங்கள் தன்னார்வலர்கள் மாற்றுத்திறனாளிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்…
மதிய உணவுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.