மும்பை;
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் கூலி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் கூலி படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
அந்த வகையில் மும்பையில் உள்ளூர் ரெயில் நிலையங்களில் உள்ள மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில்களில் கூலி படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.