அஜித்துடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம் – சிம்ரன்!!

தமிழ் சினிமா உலகில் 90-ம் ஆண்டுகளில் கனவுக்கன்னியாக வலம்வந்தவர் நடிகை சிம்ரன்.1997-ம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் படம் மூலம் அறிமுகமானார்.அதன் பின் ரஜினி, கமல், விஜய்,சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து பிரபலமானார்.தமிழ் படம் மட்டும் அல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் இந்தி மொழி படங்களிலும் நடித்தார்.

மும்பையில் இருந்து வந்தவராக இருந்தாலும், சேலை நடிக்கும் போது அசல் தமிழ்நாட்டு பெண் போன்ற தோற்றத்தில் காணப்படுவார்.தனது இயல்பான நடிப்பால் பல விருதுகளை பெற்றார்.மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே தனதுசிறுவயது நண்பரான தீபக் பாகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், சில ஆண்டுக்கு பின்பு குணசித்திர வேடங்களில் சினிமாவில் மீண்டும் நடித்தார்.டி.வி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார். மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ‘கோட்கா’ என்ற பெயரில் நட்சத்திர ஹோட்டலை நடத்தி வருகிறார்.இதன் மூலம் போதுமான வருமானம் அவருக்கு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் குறித்து ‘எக்ஸ்’ இணையதளத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகை சிம்ரன் பதில் அளித்து கூறியதாவது :-அஜித்குமாருடன் இணைந்து பணியாற்றுவது எப்போதும் சிறந்த அனுபவம். திரைப்படங்கள் மீதான அவரின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. எப்போதும் அவரின் நலனை விரும்புகிறேன்.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் ‘வாலி’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. 1999 -ம் ஆண்டில் நடிகர் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடித்த காதல் திரில்லர் படம் இது.அந்த படத்தில் அஜித்துடன் நடித்தது மறக்க முடியாதது ஆகும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *