திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களும் இன்று (9-3-2024) கலந்து பேசியதில், 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதெனவும்; வருகிற 2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை (Rajya Sabha) தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ஆனால், இந்த கூட்டணிக்கு எல்லா ஒத்துழைப்பும் அளிப்போம். இது பதவிக்கான விஷயம் அல்ல, நாட்டுக்கான விஷயம் என்பதால் எங்கு கைக்குலுக்க வேண்டுமோ அங்கு கைக்குலுக்கியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.