பாலிவுட் நட்சத்திர காதல் ஜோடியான தீபிகா படுகோன்- ரன்வீர்சிங்2018-ல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் தங்கள் கர்ப்பத்தை அறிவித்தனர். தீபிகா 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும்,செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க போவதாகவும் அதில் தெரிவித்தனர்.
தீபிகா படுகோனே கர்ப்பமாக உள்ள தகவல் அறிந்ததும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்த்தினார்கள் .
கடந்த சில நாட்களுக்கு முன் முகேஷ் அம்பானி வீட்டு திருமண முன் வைபவ நிகழ்ச்சியில் தீபிகா படுகோனே- ரன்வீர்சிங் ஜோடியாக பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
இந்நிலையில் இன்று மதியம் மும்பை விமான நிலையத்திற்கு தீபிகா படுகோன் கணவர் ரன்வீர்சிங்குடன் காரில் ஜோடியாக வந்தார்.
அதன் பின் தீபிகா மட்டும் காரில் இருந்து இறங்கி விமான நிலையத்திற்குள் சென்றார்.அவரை ரன்வீர் சிங் வழியனுப்பி வைத்தார்.
ரன்வீர்சிங்- தீபிகா படுகோன் மும்பை விமான நிலையத்திற்கு வந்த தகவல் அறிந்ததும் பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்தனர். அவரும் புன்முறுவலுடன் தாராளமாக ‘போஸ்’ கொடுத்தார்.
அதன்பின் விமான நிலைய பாதுகாப்பு சோதனை பகுதியை நோக்கி சென்றார்.தீபிகா நீலநிற டெனிம் பேண்ட், பிரவுன் நிற ஸ்வெட்டர், பிரவுன் ‘பூட்ஸ்’ அணிந்து இருந்தார். மேலும் கருப்பு நிற ‘கூலிங் கிளாஸ்’ கண்ணாடியும் அணிந்தும் ‘ஸ்டைல்’ ஆக இருந்தார்.
3 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் பளபளப்பான உடல் தோற்றத்தில் தீபிகா ஜொலித்தும் காணப்பட்டார்.