நடிகை ஷில்பா மஞ்சுநாத் அவரது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பிரத்யங்கிரா தேவி கோவிலில் மிளகாய் வத்தல் யாகம்!!

ஓசூர் ;
ஓசூர் மோரனப்பள்ளி பகுதியில் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மிளகாய் வத்தல் யாகம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

அதேபோல் நேற்று பவுர்ணமி நாளை முன்னிட்டு பிரத்யங்கிரா தேவி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருஷ்டிகள் நீங்கி மக்கள் நலமுடன் வாழ மிளகாய் வத்தல் யாகம் நடந்தது.

இந்த மகா யாகத்தில் பிரபல இளம் நடிகை ஷில்பா மஞ்சுநாத் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டார்.

இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’ படத்தில் கதாநாயகியாகவும், வலை, சிங்க பெண்ணே, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பேரழகி ஐ.எஸ்.ஓ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த வழிபாட்டில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் அவரது குடும்பத்தினர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரத்யங்கிரா தேவி முன்பு வளர்க்கப்பட்ட மகா யாகத்தில் மிளகாய் வத்தல் போட்டு திருஷ்டிகள் நீங்க அனைவரும் நலமுடன் வாழ அம்மனை வழிபட்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *