ஹராரே,
ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஹராரேயில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 127 ரன்னில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 37 ரன்கள் அடிக்க, ஜிம்பாப்வே தரப்பில் பிராட் எவன்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து ஆடிய ஜிம்பாப்வே முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்திருந்தது. பிரன்டன் டெய்லர் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஜிம்பாப்வே அணி 3 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இந்த சூழலில் நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி 359 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர் பென் கர்ரன் (121 ரன்) சதம் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஜியாவுர் ரஹ்மான் ஷெரிபி 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 232 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 34 ரன்கள் எடுத்துள்ளது.
இப்ராஹிம் சத்ரன் 25 ரன்களுடனும், குர்பாஸ் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் இன்னும் 198 ரன்கள் பின்தங்கி உள்ளது.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.