மின் பெட்​டிகளின் உயரத்தை அதிகரிக்கும் பணியை உடனடி​யாக முடிக்க வேண்​டும் என மின் வாரிய தலை​வர் ஜெ.​ராதாகிருஷ்ணன் அறி​வுறுத்தல் !!

சென்னை:
மின் பெட்​டிகளின் உயரத்தை அதிகரிக்கும் பணியை உடனடி​யாக முடிக்க வேண்​டும் என மின் வாரிய தலை​வர் ஜெ.​ராதாகிருஷ்ணன் அறி​வுறுத்​தி​னார்.

சென்னை அண்​ணா ​சாலை​யில் உள்ள மின் வாரிய தலை​மையகத்​தில் மின் வாரிய கழகங்களுக்கு இடையி​லான உயர்​மட்ட ஒருங்​கிணைப்​புக் குழு கூட்​டம் வாரிய தலை​வர் ஜெ.​ரா​தாகிருஷ்ணன் தலை​மையில் நேற்று நடை​பெற்​ற​து.

இந்த கூட்​டத்​தில் பரு​வ​மழை தொடங்கியுள்ள நிலை​யில், மழை முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​களில் ஏதேனும் விடுப்​பட்​டிருந்​தால் அவற்றை முடிக்க அறி​வுறுத்​தப்​பட்​டது.

குறிப்​பாக, தாழ்​வான பகு​தி​களில் உள்ள மின் பெட்​டிகளை உயர்த்​தும் பணியை உடனடி​யாக முடிக்க வேண்​டும். புதைவடங்​கள் வெளிப்​பட்டு இருந்​தால் அதனை கண்​காணித்து சரி செய்ய வேண்​டும்.

போதிய அளவில் மின் சாதனங்​களை கையிருப்​பில் வைத்​துக்​கொள்ள வேண்​டும். மேலும் இந்த மழைக்​காலத்​தில் மின்​சா​ரம் தொடர்​பான பிரச்​சினை​கள் ஏற்​ப​டா​மல் பார்த்​துக்​கொள்ள வேண்​டும்.

மிக முக்​கிய​மாக பொது​மக்​கள் மற்​றும் மின் வாரிய பணி​யாளர்​கள் மின் விபத்​துகளால் உயி​ரிழப்பு என்​பது இருக்க கூடாது.

இவை தவிர பணி​யாளர் தேவை மற்​றும் மனிதவள செயல்​முறை​கள், சட்ட விவ​காரங்​கள், நுகர்​வோர் சேவை மற்​றும் குறைதீர் வழி​முறை​கள், அறி​விப்​பு​கள், திட்​டங்​கள் கண்​காணிப்பு மற்​றும் நிதி முன்​னேற்​றம், மின் உற்​பத்​தி, தடை​யில்லா மின் விநி​யோகம், பொது​மக்​கள் மற்​றும் பணி​யாளர்​கள் பாது​காப்பு உள்​ளிட்​டவை குறித்து ஆலோ​சனை மேற்​கொள்​ளப்​பட்​டது.

இக்​கூட்​டத்​தில் பசுமை எரிசக்​திக் கழக மேலாண்மை இயக்​குநர் அனீஸ் சேகர், மின் உற்​பத்தி கழக மேலாண்மை இயக்​குநர் கோவிந்த ராவ், இணை மேலாண் இயக்​குநர் விஷு மஹாஜன், மின் தொடரமைப்பு கழக மேலாண் இயக்​குநர் சிவகு​மார், அனைத்து இயக்​குநர்​கள் மற்​றும் தலை​மையக உயர் அலு​வலர்​கள் கலந்து கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *