”ராணுவ வீரரின் கதையில் நடிக்கும் அமிதாப்பச்சனின் பேரன்” – படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பு!!

சென்னை;
நாட்டின் மிக உயர்ந்த இராணுவ விருதான ‘பரம் வீர் சக்ரா’ விருதைப் பெற்ற இளம் வீரரான லெப்டினன்ட் அருண் கேதர்பாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘இக்கிஸ்’ என்ற இந்தி படம் உருவாகி உள்ளது.


1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது தனது 21 வயதில் உயிர் தியாகம் செய்தார். இந்த படம் அருண் கேதர்பாலின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் இருக்கும்.

பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் மூத்த மகள் ஸ்வேதா பச்சனின் மகன் அகஸ்திய நந்தா இந்த படத்தில் அருண் கேதர்பாலாக நடிக்கிறார்.


அந்தாதுன் போன்ற வெற்றிபடங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் மூத்த நடிகர் தர்மேந்திரா மற்றும் ஜெய்தீப் அஹ்லாவத் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *