எதுவாக இருந்​தாலும் தேமுதிக 2026 சட்டப்​பேரவைத் தேர்தலில் சந்திக்கத் தயாராக இருக்​கிறது – பிரேமலதா விஜயகாந்த்!!

சென்னை:
தே​முதிக அங்கம் வகிக்கும் கூட்டணி 2026 சட்டப்​பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தேமுதிக பொதுச்​செய​லாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்​துள்​ளார்.

தேமுதிக மாவட்டச் செயலா​ளர்கள் கூட்டம் அக்கட்​சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்​பேட்டில் உள்ள தலைமை அலுவல​கத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலையச் செயலாளர் பார்த்​த​சாரதி, மாவட்டச் செயலா​ளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது.

இதில் தேர்தல் களப்பணிகள், கூட்டணி நிலவரம், மாநாடு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்​கப்​பட்டன. மேலும், தேர்தல் கூட்டணி நிலைப்​பாட்டில் மாவட்டச் செயலா​ளர்கள் மத்தியில் கலவையான கருத்​துகள் பகிரப்​பட்​ட​தாகவும் கூறப்​படு​கிறது.

கூட்டம் முடிந்த பின்னர் பிரேமலதா செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தேமுதி​க-வின் அடுத்​தகட்ட நகர்வுகள், வளர்ச்சி குறித்​தும், பல முக்கியமான கருத்​துகள் குறித்து இன்றைய கூட்டத்தில் கலந்து ஆலோசித்​துள்​ளோம். எஸ்ஐஆர் பற்றி தற்போது பெருமளவில் பேசப்​பட்டு வருகிறது.

எதுவாக இருந்​தாலும் தேமுதிக 2026 சட்டப்​பேரவைத் தேர்தலில் சந்திக்கத் தயாராக இருக்​கிறது.

வாக்காளர் பட்டியலில் தேமுதி​க-​வினரின் வாக்குகள் நீக்கப்​ப​டாமல் இருப்பது குறித்து கண்காணிக்க அறிவுறுத்​தப்​பட்​டுள்ளது. எனது 4-ம் கட்ட சுற்றுப்​பயணம் கன்னி​யாகுமரியில் தொடங்கி விருதுநகரில் முடிவடைகிறது.

தமிழகத்தில் நடைபெறும் மக்கள் பிரச்​சினைகள் அனைத்​தையும் கவனித்து அறிக்கை தருவதுடன் அந்தக் களத்துக்கு சென்று பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ஆதரவு கொடுப்​ப​திலும் தேமுதிக முதல் கட்சியாக செயல்​பட்​டிருக்​கிறது.

கூட்டணி விவகாரத்தில் தமிழகத்​துக்​கும், மக்களுக்கும் பலன் தரக்கூடிய அளவில் சிந்தித்து நல்ல முடிவு எடுப்​போம்.

அதன்படி தேமுதிக யாருடன் கூட்டணி என்பது ஜனவரி 9-ம் தேதி நடைபெற உள்ள ‘மக்களை மீட்போம்’ மாநாட்டில் அறிவிக்​கப்​படும்.

கூட்டணிப் பேச்சு​வார்த்​தையில் எந்த ரகசியமும் கிடையாது. இந்த சட்டப்​பேரவை தேர்தலில் மிக பிரம்​மாண்டமான கூட்டணி அமையும்.

தேமுதிக அங்கம் வகிக்கும் அந்தக் கூட்டணி 2026 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்​கும். தேமுதிக அங்கீகரிக்​கப்பட்ட கட்சி.

அதனால் முரசு சின்னத்தில் தான் எங்களது வேட்பாளர்கள் போட்டி​யிடு​வார்கள். வட மாநிலத்தில் இருந்து வருபவர்கள் பணி நிமித்தம் வந்தாலும் இங்கு வாக்காளராக ஆக முடியாது.

தங்கள் பிறந்த மாநிலத்தில் வாக்களிப்​பதுதான் சரியாக இருக்​கும். எஸ்ஐஆர் திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையமும், மாநில அரசும் தான் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த தேர்தலில் தவெக – திமுக இடையேதான் போட்டி என்ற விஜய் கருத்​துக்கு பதில் கூற முடி​யாது. நாங்கள் 20 ஆண்​டுகளாக கட்சி நடத்தி வரு​கி​றோம். இவ்வாறு அவர் கூறி​னார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *