அதிமுகவை ஒழிப்பேன் என்று அண்ணாமலை ஆணவத்தினால் பேசுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ் மணியை ஆதரித்து திருச்செங்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் , ஏழைகளுக்கான அதிமுக அரசின் பல திட்டங்களை திமுக அரசின் நிறுத்திவிட்டது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்றார்.
இடைத்தொடர்ந்து சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் விக்னேஷுக்கு ஆதரவாக பரப்பரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுகவை ஒழிப்பேன் என்று அண்ணாமலை ஆணவத்தில் பேசுகிறார். அதிமுக தெய்வத்தால் உருவாக்கப்பட்ட கட்சி. உங்களைப் போல எத்தனையோ பேர் இப்படி கொக்கரித்தார்கள். ஆணவத்தில் பேசாதீங்க. 1998இல் ஊரு ஊராக தாமரை சின்னத்தை அடையாளம் காட்டியது அதிமுக தான்.
நீங்கள் எல்லாம் டெல்லியில் இருப்பவர்களால் நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். அவர்கள் விரும்பி வைத்திருக்கும் வரை தான் நீங்கள் தலைவர். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மாற்றப்படலாம். கொஞ்சம் கவனமாக பேசுங்கள். அதிமுக ஒரு மாதிரியான கட்சி புரிந்து கொள்ளுங்கள். கருணாநிதியையும் , ஸ்டாலினையும் பார்த்த கட்சி இது என்றார்.