ஓய்​வெடுப்ப​தற்​காக தனது குடும்​பத்​தினருடன் கொடைக்கானலுக்கு இன்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வருகை!!

பழநி: ​
திண்​டுக்​கல் மாவட்​டம், கொடைக்கானலுக்கு ஓய்​வெடுப்ப​தற்​காக தனது குடும்​பத்​தினருடன் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இன்று (ஏப்​.25) வரு​கை தரவுள்ளார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடந்து முடிந்​துள்ள நிலை​யில், முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஓய்வு எடுப்​ப​தற்​காக 5 நாட்​கள் பயண​மாக தனது குடும்​பத்​துடன் இன்று கொடைக்​கானலுக்கு வரு​கிறார்.

இதற்காக இன்று காலை சென்​னை​யில் இருந்து தனி விமானத்​தில் குடும்​பத்​தினருடன் மதுரை வரு​கிறார். அங்​கிருந்து கார் மூலம் கொடைக்​கானலுக்கு வரு​கிறார். இங்கு தனி​யார் ஹோட்​டலில் தங்க உள்​ளனர்.

ஏப்​ரல் 29-ம் தேதி வரை ஓய்​வெடுக்​கும் அவர்​கள், ஏப்​ரல் 30-ம் தேதி மீண்​டும் சென்னை திரும்​பு​கின்​றனர் என தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இதே​போல், கடந்த 2021-ல் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் மற்​றும் 2024-ல் மக்​கள​வைத் தேர்​தல் முடிவடைந்​ததும், ஸ்டா​லின் தனது குடும்​பத்​துடன் கொடைக்கானல் வந்து தங்கி ஓய்​வெடுத்​துவிட்டு சென்னை திரும்பினார் என்பது குறிப்​பிடத்​தக்​கது.

இரண்டு ஆண்​டு​களுக்​குப் பிறகு தற்​போது அதே​போல் ஓய்​வெடுக்க கொடைக்கானல் வரு​கிறார். ஓய்​வுக்​காக செல்​வ​தால், கட்​சி​யினர் யாரும் முதல்​வரை சந்​திக்க அனு​மதி இல்லை என்​றும் தி​முக நிர்​வாகி​கள்​ தெரி​வித்​தனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *