தேர்தலைக் குறிப்பிடும் வகையில் கவன ஈர்ப்புச் சித்திரம் ஒன்றை வெளியிட்ட கூகுள் !!

நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 16.63 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்த உள்ளனர்.

இந்த நிலையில், தேர்தலைக் குறிப்பிடும் வகையில் கூகுள் கவன ஈர்ப்புச் சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் Google என ஆங்கில மொழியில் உள்ள கூகுள் தளத்தின் முகப்பில் உள்ள இரண்டாவது “O”வுக்குப் பதிலாக சுட்டு விரலில் வாக்கு செலுத்தியதற்கான அடையான மையுடன் கூடிய எமோஜி வகையிலான படம் இடம்பெற்றுள்ளது. இது வாக்குப்பதிவின் அவசியம் குறித்து எடுத்துக் கூறுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *