ரூ38,000 கோடி வெள்ள நிவாரண நிதி கேட்ட தமிழ்நாட்டுக்கு ரூ276 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 2023 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தேசிய கட்சிகளால் தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. தமிழ்நாட்டை ஓரவஞ்சனையுடன் பார்க்கும் ஒன்றிய அரசு, யானை பசிக்கு சோளப்பொரிபோல நிதி ஒதுக்கியுள்ளது. நிதி பகிர்வு சீராக இல்லை.
தேசியக் கட்சிகளால் தமிழகத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை; தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது; நிதி பகிர்வு சீராக இருக்க வேண்டும்; மத்தியில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக இருந்தாலும் தமிழகத்திற்கு நிதி தருவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.