திருச்சியில் திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார்.
நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து பாதிப்புக்களை அடுத்த 48 மணி நேரத்திற்குள் சரி செய்யவும் அறிவுறுத்தபட்டுள்ளது.
போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் நேற்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்திய நிலையில் உத்தரவிடப்பட்டுள்ளது.