தினம்தோறும் மக்கள் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே நல்லாட்சியின் சாட்சி – முதலமைச்சர் ஸ்டாலின் !!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 3 ஆண்டு நிறைவு செய்து, 4ஆவது ஆண்டை தொடங்கும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி பொறுப்பில் அமர்ந்தது. கடந்த 2021 மே 7ஆம் தேதி முதல்வராக முதல் முறையாக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார்.

அதன்படி திமுக ஆட்சிக்கு வந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து , நான்காவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

இந்த மூன்று ஆண்டுகளில் முதல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக அரசு பேருந்துகளில் மகளிர்க்கு இலவச பயணம், மகளிர் உரிமைத் தொகை திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் ,பள்ளிகளில் காலை உணவு என பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுத்தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், நாடும், மாநிலமும் பயனுற எந்நாளும் உழைப்பேன். இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி; மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது நம்பிக்கையோடு முன்செல்கிறேன்; பெருமையோடு சொல்கிறேன்; தலைசிறந்த மூன்றாண்டு; தலைநிமிர்ந்த தமிழ்நாடு; தினம்தோறும் மக்கள் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே நல்லாட்சியின் சாட்சி . 4வது ஆண்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு திராவிட மாடல் அரசு. மக்களுக்கான அரசு; தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினருக்குமான ஆட்சி நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *