ஒரே நாளில் சென்னையில் 118 பேருக்கு டெங்கு!!

சென்னை:
தமிழக சுகா​தா​ரத்​ துறை அமைச்​சர் அருண்​ராஜ் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்​சலால் 25,585 பேர் பாதிக்​கப்​பட்​டனர்.

இந்த ஆண்டு இது​வரை 23,241 பேர் டெங்கு பாதிப்​புக்கு ஆளாகி​யுள்​ளனர். சென்னையில் அக்​டோபர் 13-ம் தேதி 118 பேர் டெங்​கு​வால் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

தமிழகத்​தில் டெங்கு காய்ச்​சல் கட்​டுக்​குள் உள்​ளது. டெங்​குவை கட்​டுப்​படுத்த தேவை​யான அனைத்து நடவடிக்​கைகளை​யும் அரசு எடுத்து வரு​கிறது.

மாநக​ராட்சி மருத்​து​வ​மனை​கள், அரசு ஆரம்ப சுகா​தார மருத்​து​வ​மனை​களில் மருத்​து​வர்​கள் போதிய அளவில் உள்​ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *