மாட்டுத் தொழுவங்களுக்கு கட்டாய உரிமம் பெற வேண்டும் என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் மாடுகளை வளர்க்கும் தொழுவங்களுக்கு உரிமம் பெறுவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் புதிய விதிகள் நடைமுறைக்க வரவுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
மாடுகள் வளர்ப்போர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிமம் பெற வேண்டும். சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பொதுமக்களை தாக்கிய சம்பவங்களை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.