கனமழையை எதிர்கொள்ள சென்னை தவிர மதுரை உள்ளிட்ட பிற நகரங்களிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, “சென்னையில் திடீர் கனமழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை மட்டுமின்றி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிற மாவட்டங்களிலும், நடவடிக்கைகள் எடுக்க ஆட்சியர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
அத்துடன் மழை நேரத்தில் நிறுத்தப்பட்ட வடிகால் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. செவ்வாய் கிழமை தோறும் சென்னை மாநகராட்சி சார்பில் ஆய்வு கூட்டம் நடத்தப்படும் என்றார்.