சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர் !!

சென்னை,
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து விற்பனையாகிறது.

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்தது. இதன் மூலம் ஒரு கிராம் 6720 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூபாய் 520 உயர்ந்த நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 53 ஆயிரத்து 760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,920க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,740க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.3.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.101.50-க்கும், ஒரு கிலோ ரூ. 1,01,500-க்கும் விற்பனையாகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *