கோவை, நீலகிரியை தொடர்ந்து 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்ட ங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  கூறியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதிகபட் சமாக நீலகிரி தேவாலாவில் 18 செமீ, ஆலங்குடியில் 12 செமீ மழை பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Posts