வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க ஜூன் 19-ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி.சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வியாழக் கிழமைகளில் இயக்கப் படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் ( 06067 ) மே 2-ம் தேதி முதல் ஜூன் 27-ம் தேதி வரை நீட்டிக்கப்படும்.
நாகர்கோவில் – சென்னை எழும்பூருக்கு வியாழக் கிழமைகளில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் ( 06068 ) மே 5-ம் தேதி முதல் ஜூன் 27-ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது.
இந்நிலையில் எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக ஜூன் 19-ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி.