இந்த வார விசேஷங்கள்!!

18-ந்தேதி (செவ்வாய்)

  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் திருக்கல்யாணம்.
  • மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி உற்சவம் ஆரம்பம்.
  • காங்கேயம் முருகப்பெருமான் லட்சதீபக் காட்சி.
  • உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி பிரபையிலும் தாயாருடன் புறப்பாடு.
  • சமநோக்கு நாள்.
    19-ந்தேதி (புதன்)
  • நத்தம் மாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா, புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
  • ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
  • கீழ்நோக்கு நாள்,
    20-ந்தேதி (வியாழன்)
  • சஷ்டி விரதம்.
  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் பவனி.
  • திருவாரூர் தியாகராஜர் பவனி.
  • சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
  • சமநோக்கு நாள்.
    21-ந்தேதி (வெள்ளி)
  • திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் காலை சிம்ம வாகனத்திலும், இரவு சேஷ வாகனத்திலும் பவனி.
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
  • திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
  • சமநோக்கு நாள்.
    22-ந்தேதி (சனி)
  • திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
  • காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், திருவரங்கம் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்,
  • கீழ்நோக்கு நாள்.
    23-ந்தேதி (ஞாயிறு)
  • மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி கண்ட பேரண்ட பட்சி ராஜ அலங்காரம்.
  • திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் பூந்தேரில் பவனி.
  • உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை சூர்ணாபிஷேகம், இரவு சுவாமி புன்னை மரம், தாயார் அலங்காரப்படி சட்டத்தில் பவனி.
  • கீழ்நோக்கு நாள்.
    24-ந்தேதி (திங்கள்)
  • திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் வண்டலூர் சப்பரத்திலும், இரவு தங்க குதிரை வாகனத்திலும் பவனி.
  • உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலையில் வெண்ணெய்த்தாழி சேவை.
  • மேல்நோக்கு நாள்.
SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *