சென்னையில் தங்கம் விலை இன்று மீண்டும் ரூ.94,000-ஐ தாண்டியது – பவுனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.94,400-க்கு விற்பனை!!

சென்னை
சென்னையில் தங்கம் விலை இன்று மீண்டும் ரூ.94,000-ஐ தாண்டியது. பவுனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.94,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்.17-ம் தேதி ரூ.97,600-ஆக விலை அதிகரித்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.

கடந்த 28-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.88,600 ஆக இருந்தது. நவ.13-ம் தேதி ரூ.95,920 ஆக இருந்தது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருக்கிறது.

சென்னையில் தங்கம் விலை நேற்று மீண்டும் ரூ.93 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ரூ.93,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.200 உயர்ந்து, ரூ.11,720-க்கு விற்கப்பட்டது.

24 காரட் தங்கம் ரூ.1,02,280 ஆக இருந்தது. இதுபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ரூ.174 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து, ரூ.1.74 லட்சமாகவும் இருந்தது.

இந்த நிலையில், சென்னையில் இன்று (நவ.26) தங்கம் விலை ரூ.94 ஆயிரத்தை தாண்டியது.

பவுனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.94,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.80 உயர்ந்து, ரூ.11,800-க்கு விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் ரூ.1,02,984 ஆக இருக்கிறது.

இதுபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ரூ.176 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து, ரூ,1.76 லட்சமாகவும் உள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டு ரூ.89.20 ஆக உள்ளது. இத்துடன், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பதும் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *