பூங்காவில் மின்சாரம் பாய்ந்து சிறுவர்கள் இருவரும் உயிரிழப்பு!!

பூங்காவில் மின்சாரம் பாய்ந்து 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி சின்ன வேடம்பட்டி துடியலூர் ரோடு ராமன் விகார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்குள்ள குழந்தைகள் விளையாடப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

மாலை நேரத்தில் குழந்தைகள் பூங்காவில் ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி விளையாடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று பிரசாந்த் ரெட்டி மகன் ஜியான்ஸ் ரெட்டி , பாலச்சந்தர் மகள் வியோமா ஆகிய இருவரும் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது சறுக்கில் இரண்டு பேரும் விளையாடியதாக தெரிகிறது. சறுக்கில் ஏறி இறங்கி சந்தோஷமாக குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தனர். அங்கிருந்த குழந்தைகள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர்கள் ஜியான்ஸ் ரெட்டி வியோமா பிரியா ஆகிய இருவரையும் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று நிலையில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது .

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மின்சாரம் பாய்ந்து சிறுவர்கள் இருவரும் இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *