தமன்னாவை சந்தித்து வாழ்த்து கூறிய இயக்குனர் லிங்குசாமி !!

பையா திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியான திரைப்படம் பையா.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் திரைப்படத்தை தயாரித்திருந்தது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார். பையா திரைப்படம் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ஹிட் ஆகி பெரும் வரவேற்பு பெற்றது.
பையா திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கப் போவதாக தகவல்களும் வெளியாகின.

இந்நிலையில் பையா திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. பையா திரைப்படம் ரிலீஸ் ஆனதை தொடர்ந்து இயக்குனர் லிங்குசாமி தமன்னாவை சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார்.

இதற்கான புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *